/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/கீழம்பி ஊராட்சியில் பாலர் சபை துவக்கம்கீழம்பி ஊராட்சியில் பாலர் சபை துவக்கம்
கீழம்பி ஊராட்சியில் பாலர் சபை துவக்கம்
கீழம்பி ஊராட்சியில் பாலர் சபை துவக்கம்
கீழம்பி ஊராட்சியில் பாலர் சபை துவக்கம்
ADDED : பிப் 24, 2024 12:43 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, ஊராட்சி கூட்டம், சிறப்பு கிராம சபை கூட்டங்கள் மட்டுமே நடைபெறுகின்றன.
முதல் முறையாக, வாலாஜாபாத் ஒன்றியம்தேவரியம்பாக்கம் ஊராட்சியில், கடந்த ஜனவரி மாதம் பாலர் சபை கூட்டம் மற்றும்மகிளா சபை என, அழைக்கப்படும் மகளிர்சபை துவக்கப்பட்டு உள்ளன.
அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் ஒன்றியம் கீழம்பி கிராமத்தில், மகிளா சபை சமீபத்தில் துவக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து, நேற்று பாலர் சபை துவக்கபட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு, கீழம்பி ஊராட்சி தலைவர்மகாலட்சுமி தலைமை வகித்தார். மறைமலை நகர் மாநில ஊரக வளர்ச்சி பயிற்சியாளர் கோகுல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இதில், சுற்றுச்சூழல்,ஒழுக்கம், படிப்பு, குப்பை ஒழித்தல் உள்ளிட்டவை குறித்து, பாலர் சபை உறுப்பினர்கள் இடையே கலந்துரையாடல் நடந்தது.
இதையடுத்து, மார்ச் மாதம் பாலர் சபைக்குரிய தேர்தல் முறையாக நடத்தி, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என, பயிற்சியாளர் தெரிவித்தார்.