/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஜாதி பாகுபாடற்ற ஊராட்சிக்கு ஊக்கத்தொகை: விண்ணப்பம் வரவேற்பு ஜாதி பாகுபாடற்ற ஊராட்சிக்கு ஊக்கத்தொகை: விண்ணப்பம் வரவேற்பு
ஜாதி பாகுபாடற்ற ஊராட்சிக்கு ஊக்கத்தொகை: விண்ணப்பம் வரவேற்பு
ஜாதி பாகுபாடற்ற ஊராட்சிக்கு ஊக்கத்தொகை: விண்ணப்பம் வரவேற்பு
ஜாதி பாகுபாடற்ற ஊராட்சிக்கு ஊக்கத்தொகை: விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூலை 04, 2025 12:34 AM
காஞ்சிபுரம்,:'ஜாதி பாகுபாடற்ற, சமூக ஒற்றுமையை கடைப்பிடிக்கும் ஊராட்சிகள், 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்' என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஜாதி பாகுபாடற்ற நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையை கடைப்பிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கவுரவிக்கும் வகையில், தகுதி உள்ள 10 ஊராட்சிகளுக்கு, தலா, 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருது, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி வழங்கப்படும்.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஜாதி பாகுபாடற்ற நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைப்பிடிக்கும் ஊராட்சிகளாக இருப்பின், ஊராட்சி தலைவர்கள், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில், நேரில் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை ஜூலை 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.