ADDED : ஜன 29, 2024 04:03 AM
வாலாஜாபாத் துாய்மை பணியாளர்கள் தினத்தை ஒட்டி, வாலாஜாபாத் பேரூராட்சியில், துாய்மை பணியாளர்களுக்கு கவுரவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று துாய்மை பணியாளர்களை பாராட்டி பேசினார்.
அப்போது, வாலாஜாபாத் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பணியாற்றும் 60க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களுக்கு மாலை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
இதில், வாலாஜாபாத் ஒன்றிய குழு துணை தலைவர் சேகர் மற்றும் வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.