/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உயர்கோபுர மின்விளக்கு களக்காட்டூரில் அமைப்பு உயர்கோபுர மின்விளக்கு களக்காட்டூரில் அமைப்பு
உயர்கோபுர மின்விளக்கு களக்காட்டூரில் அமைப்பு
உயர்கோபுர மின்விளக்கு களக்காட்டூரில் அமைப்பு
உயர்கோபுர மின்விளக்கு களக்காட்டூரில் அமைப்பு
ADDED : மே 27, 2025 07:36 PM
களக்காட்டூர்:காஞ்சிபுரம் அடுத்த, களக்காட்டூரில், மும்முனை சாலை சந்திப்பில், கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் அமைந்துள்ள பகுதியில் போதுமான வெளிச்சம் இல்லாததால், இரவு நேரத்தில் இவ்வழியாக செல்வோர் அச்சத்துடன் சென்று வந்தனர்.
எனவே, இப்பகுதியில், வெளிச்சம் தரும் வகையில், உயர்கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், லோக்சபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து உயர்கோபுர மின்விளக்கு அமைக்க, 4.15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.
இந்நிதியில் இருந்து, கரியமாணிக்க பெருமாள் கோவில் வளாகத்தில், புதிதாக உயர்கோபுர சோலார் மின்விளக்கு அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.