/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காஞ்சிபுரம் அருங்காட்சியகத்தில் 15 கற்சிலைகள் ஒப்படைப்புகாஞ்சிபுரம் அருங்காட்சியகத்தில் 15 கற்சிலைகள் ஒப்படைப்பு
காஞ்சிபுரம் அருங்காட்சியகத்தில் 15 கற்சிலைகள் ஒப்படைப்பு
காஞ்சிபுரம் அருங்காட்சியகத்தில் 15 கற்சிலைகள் ஒப்படைப்பு
காஞ்சிபுரம் அருங்காட்சியகத்தில் 15 கற்சிலைகள் ஒப்படைப்பு
ADDED : பிப் 25, 2024 02:04 AM

காஞ்சிபுரம்,:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட 15 கற்சிலைகள், காஞ்சிபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டன.
இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில், கோவளம், முட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில், 10 - 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி, நவக்கிரகம் உள்ளிட்ட 15 கற்சிலைகள், 2013 - 22ம் ஆண்டுகளில் பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டன.
இந்த 15 கற்சிலைகள், காஞ்சிபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் நேற்று, திருப்போரூர் தாலுகா அலுவலக ஊழியர்கள் வாயிலாக முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.
இச்சிலைகளை காஞ்சிபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியகம், யாத்ரி நிவாஸ் அருகில், புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.