இனி நாங்க "மெலோடி டீம்": பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் எடுத்த செல்பி வீடியோ வைரல்
இனி நாங்க "மெலோடி டீம்": பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் எடுத்த செல்பி வீடியோ வைரல்
இனி நாங்க "மெலோடி டீம்": பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் எடுத்த செல்பி வீடியோ வைரல்
UPDATED : ஜூன் 15, 2024 12:57 PM
ADDED : ஜூன் 15, 2024 10:24 AM

புதுடில்லி: ஜி7 மாநாட்டில் பங்கேற்ற, பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி செல்பி எடுத்து கொண்டார். இந்த வீடியோவை அவர் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இருவரின் பெயர்களிலும் உள்ள எழுத்துகளை ஒன்றிணைத்து 'மெலோடி டீம்' என வீடியோவில் மெலோனி குறிப்பிட்டுள்ளார்.
ஜி7 மாநாட்டின், 50வது ஆண்டு கூட்டம், ஐரோப்பிய நாடான இத்தாலியில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக இந்தியாவுக்கு, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று பிரதமர் மோடி இத்தாலி சென்றார்.
போப் பிரான்சிஸ், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களை அவர் சந்தித்து பேசினார். போப் பிரான்சிஸை பிரதமர் மோடி ஆரத்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
வைரலான செல்பி
இத்தாலியில் ஜி7 மாநாட்டின் இடையே பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி செல்பி எடுத்துக் கொண்டார். இருவரும் சிரித்தவாரே போஸ் கொடுத்தனர். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதற்கு முன்னர் துபாயில் நடந்த பருவநிலை மாநாட்டின் போது இரு தலைவர்களும் எடுத்துக் கொண்ட செல்பி வைரலானது குறிப்பிடத்தக்கது.
வீடியோ வைரல்
பிரதமர் மோடியுடன் எடுத்த செல்பி வீடியோவை இத்தாலி பிரதமர் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இருவரின் பெயர்களிலும் உள்ள எழுத்துகளை ஒன்றிணைத்து 'மெலோடி டீம்' என வீடியோவில் மெலோனி குறிப்பிட்டுள்ளார். சமூகவலைதளத்தில் வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

டில்லி திரும்பினார் மோடி
ஜி 7 மாநாட்டை முடித்து விட்டு, இன்று (ஜூன் 15) பிரதமர் மோடி டில்லி திரும்பினார்.