" நல் ஆரோக்கியத்திற்கு சக்கராசனம் செய்யுங்கள்" - பிரதமர் மோடி அறிவுரை
" நல் ஆரோக்கியத்திற்கு சக்கராசனம் செய்யுங்கள்" - பிரதமர் மோடி அறிவுரை
" நல் ஆரோக்கியத்திற்கு சக்கராசனம் செய்யுங்கள்" - பிரதமர் மோடி அறிவுரை
ADDED : ஜூன் 15, 2024 09:20 AM

புதுடில்லி: நல்ல ஆரோக்கியத்திற்காக, சக்கராசனத்தை பயிற்சி செய்யுங்கள் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.
சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வீடியோவில்;
சக்கராசனம் செய்வதால் கிடைக்கும் பலன் குறித்து விளக்கமாக கூறப்பட்டுள்ளது. '' நல்ல ஆரோக்கியத்திற்காக சக்கராசனத்தை பயிற்சி செய்யுங்கள். இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது '' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சக்கராசனம் என்பது உடலை சக்கரம் போல் வளைத்துக் காட்டும் ஒரு ஆசனப்பயிற்சி நிலையாகும். 'சக்ரா' என்றால் சக்கரம் எனவும், ஆசனம் என்றால் நிலை என்றும்
பொருளாகும்.