/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/குடியரசு தின விழாவிற்கு காவலர்கள் ஒத்திகைகுடியரசு தின விழாவிற்கு காவலர்கள் ஒத்திகை
குடியரசு தின விழாவிற்கு காவலர்கள் ஒத்திகை
குடியரசு தின விழாவிற்கு காவலர்கள் ஒத்திகை
குடியரசு தின விழாவிற்கு காவலர்கள் ஒத்திகை
ADDED : ஜன 24, 2024 09:58 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், அண்ணா காவல் அரங்கம் உள்ளது. இங்கு, விடுமுறை தினங்களில் விளையாட்டு மைதானமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாக்கள் நலத்திட்ட உதவிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் வெகுவிமரிசையாக நடைபெறும்.நாளை, குடியரசு தின விழாவை முன்னிட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்த விழாவிற்கு, கடந்த வாரம் பொதுப்பணித் துறையினர் மண்ணை சமன்படுத்தினர். அதை தொடர்ந்து, நேற்று, ஆயுதப்படை காவலர்கள் அணி வகுப்பு செய்வதற்கு ஒத்திகை பார்த்தனர்.