/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சொர்ணவாரி பருவ சாகுபடி விவசாயிகள் துவக்கம் சொர்ணவாரி பருவ சாகுபடி விவசாயிகள் துவக்கம்
சொர்ணவாரி பருவ சாகுபடி விவசாயிகள் துவக்கம்
சொர்ணவாரி பருவ சாகுபடி விவசாயிகள் துவக்கம்
சொர்ணவாரி பருவ சாகுபடி விவசாயிகள் துவக்கம்
ADDED : மே 27, 2025 11:40 PM

திருமுக்கூடல்:உத்திரமேரூர் ஒன்றியத்தில், ஏரி, கிணறு மற்றும் ஆற்று பாசனம் வாயிலாக விவசாயிகள் முப்போகம் சாகுபடி செய்கின்றனர்.
கடந்த பருவ மழையை தொடர்ந்து, நவரை பட்டத்திற்கு நெல் சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது அறுவடை பணிகளை முடித்துள்ளனர்.
இந்நிலையில், கோடைக்காலம் நிறைவு பெறும் நிலையில், ஒன்றியத்தின் பெரும்பாலான ஏரிகளில் கணிசமான அளவு நீர் இருப்பு உள்ளது.
மேலும், சில நாட்களாக அடிக்கடி பெய்த கோடை மழை காரணமாக நிலங்களில் ஈரப்பதம் மற்றும் விவசாய கிணறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
அதேபோன்று, பாலாறு மற்றும் செய்யாற்று படுகைகளிலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதையடுத்து, நவரை பருவ சாகுபடியை தொடர்ந்து விவசாயிகள் அடுத்தகட்ட போகமான சொர்ணவாரி பட்ட சாகுபடி பணிகளை துவக்கி உள்ளனர்.
திருமுக்கூடல், பினாயூர், சீட்டணஞ்சேரி, காவிதண்டலம், களியப்பேட்டை, அரும்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில், விவசாய நிலங்களின் ஈரப்பதத்தை பயன்படுத்தி, நிலம் பதப்படுத்துதல், உழவுப்பணி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள்தீவிரப்படுத்தியுள்ளனர்.