/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாகரலில் டீசல் நிரப்பிய லாரி தீப்பிடிப்பு மாகரலில் டீசல் நிரப்பிய லாரி தீப்பிடிப்பு
மாகரலில் டீசல் நிரப்பிய லாரி தீப்பிடிப்பு
மாகரலில் டீசல் நிரப்பிய லாரி தீப்பிடிப்பு
மாகரலில் டீசல் நிரப்பிய லாரி தீப்பிடிப்பு
ADDED : மே 27, 2025 11:41 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த. ஆற்பாக்கம் கிராமத்தில், தனியார் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இங்கிருந்து. டேங்கர் லாரியில் எடுத்து செல்லப்படும் பெட்ரோல், டீசல் ஆகிய எரி பொருட்கள் பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
அந்த வகையில், வயலாத்துார் சாலையில், டீசல் ஏற்றிக் கொண்டு சென்ற லாரி, மாகரல் மின்வாரிய அலுவலகம் அருகே நேற்று மதியம் 3:00 மணியளவில் சென்றபோது திடீரென தீப்பற்றி எரிந்தது.
லாரியின் என்ஜினில் தீப்பிடித்து எரிந்தது. ஓட்டுநர் உடனடியாக லாரியில் இருந்து வெளியேறினார். உடனடியாக, உத்திரமேரூரில் இருந்து வந்த தீயணைப்பு வாகனம், லாரியில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
அதிர்ஷ்டவசமாக, லாரியில் இருந்த டீசல் டேங்கில் தீப்பிடிக்கவில்லை. தீயை அணைத்த பின், மாகரல் போலீசார் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.