/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாநகராட்சி மீதான அதிருப்தியை சமாளிக்க வார்டுகளில் குறைதீர் முகாம் நடத்தும் தி.மு.க. மாநகராட்சி மீதான அதிருப்தியை சமாளிக்க வார்டுகளில் குறைதீர் முகாம் நடத்தும் தி.மு.க.
மாநகராட்சி மீதான அதிருப்தியை சமாளிக்க வார்டுகளில் குறைதீர் முகாம் நடத்தும் தி.மு.க.
மாநகராட்சி மீதான அதிருப்தியை சமாளிக்க வார்டுகளில் குறைதீர் முகாம் நடத்தும் தி.மு.க.
மாநகராட்சி மீதான அதிருப்தியை சமாளிக்க வார்டுகளில் குறைதீர் முகாம் நடத்தும் தி.மு.க.
ADDED : ஜூன் 17, 2025 10:01 PM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சி மீதான அதிருப்தியை சமாளிக்க, வார்டு வாரியாக குறைதீர் முகாம்களை, தி.மு.க., நடத்த துவக்கி உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், நான்கு மண்டலங்களின்கீழ், 51 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிலும் தீர்க்கப்படாத பல பிரச்னைகள் இன்றைக்கும் உள்ளன.
அவற்றை சரி செய்யக்கோரி, கவுன்சிலர்களிடம் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இன்றி உள்ளது. மாநகராட்சி கூட்டத்திலும் கவுன்சிலர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த போதும், பல நடவடிக்கைகள் கிடப்பில் உள்ளன.
பாதாள சாக்கடை அடைப்பு, மழைநீர் கால்வாய் கோரிக்கை, சாலை சீரமைப்பு, மின் விளக்கு, நாய்கள் தொல்லை, வரி விதிப்பு குளறுபடிகள், தரமற்ற கட்டுமானம் என, பல பிரச்னைகள் முன்வைத்தாலும் நடப்பதாக இல்லை.
இந்நிலையில், அ.தி.மு.க., சார்பில், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, மாவட்ட செயலர் சோமசுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். நகரவாசிகள் மத்தியில் உள்ள அதிருப்தியை சமாளிக்கும் வகையில், வார்டு வாரியாக குறைதீர் முகாம்களை தி.மு.க., முன்கூட்டியே துவக்கி உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ., எழிலரசனும், உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் எம்.எல்.ஏ., சுந்தரும், முகாம்களை நடத்துகின்றனர்.
உடன், மேயர் மகாலட்சுமி பங்கேற்று வருகிறார். நான்கு மண்டலங்களில் உள்ள வார்டுகளுக்கு ஏற்ப, நேற்றுமுன்தினம் துவங்கிய இம்முகாம் வரும் 28ம் தேதி வரை இந்த குறைதீர் முகாம்கள் நடத்துகின்றனர்.