/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/அரசு பள்ளி மாணவர்களுக்கு 940 சைக்கிள்கள் வழங்கல்அரசு பள்ளி மாணவர்களுக்கு 940 சைக்கிள்கள் வழங்கல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு 940 சைக்கிள்கள் வழங்கல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு 940 சைக்கிள்கள் வழங்கல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு 940 சைக்கிள்கள் வழங்கல்
ADDED : ஜன 03, 2024 09:57 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுகள், 940 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் அடுத்த, ஈஞ்சம்பாக்கம், கோவிந்தவாடி, புள்ளலுார், பரந்துார் ஆகிய மேல்நிலைப்பள்ளிகளில் சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மேற்கண்ட நான்கு பள்ளிகளைச் சேர்ந்த, 294 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
அதை தொடர்ந்து, புரிசை கிராமத்தில் தன் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டிய கூடுதல் வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தார்.
வாலாஜாபாத் ஒன்றியம், தென்னேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், நேற்று, 61 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
இதேபோன்று, வாலாஜாபாத் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 333 மாணவியருக்கும், வாலாஜாபாத் அறிஞர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 138 மாணவர்களுக்கும், வாலாஜாபாத், மாசிலாமணி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 114 மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று சைக்கிள்களை வழங்கினார்.
வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், வாலாஜாபாத் தி.மு.க., ஒன்றிய செயலர் சேகர் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.