/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/கிளாம்பாக்கத்தில் தவித்த இளம்பெண் பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்கிளாம்பாக்கத்தில் தவித்த இளம்பெண் பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
கிளாம்பாக்கத்தில் தவித்த இளம்பெண் பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
கிளாம்பாக்கத்தில் தவித்த இளம்பெண் பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
கிளாம்பாக்கத்தில் தவித்த இளம்பெண் பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
ADDED : ஜன 04, 2024 10:27 PM
கூடுவாஞ்சேரி:விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தென்மேல் கிராமத்தில் வசிப்பவர் பவுல்ராஜ், 47. அவரின் மகள் காவியா, 20. பிளஸ் 2 வரை படித்துவிட்டு, வீட்டில் இருந்துள்ளார்.
வேலைக்கு செல்லாமல் இருப்பதால், பெற்றோர் காவியாவை கண்டித்துள்ளனர். இதில் மனம் உடைந்த காவியா, யாரிடமும் சொல்லாமல் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்தில் வந்துள்ளார்.
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு இறங்கிய அவர், எங்கு செல்வது என தெரியாமல் திகைத்தபடி நின்றுள்ளார்.
அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த கூடுவாஞ்சேரி போலீசார், காவியாவை அழைத்து விசாரித்தனர். அதில், அவர் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வந்தது தெரிந்தது.
தொடர்ந்து, தனியார் தொண்டு நிறுவன இல்லத்தில் தங்க வைத்த கூடுவாஞ்சேரி போலீசார், காவியாவின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.
நேற்று காலை கூடுவாஞ்சேரி காவல் நிலையம் வந்த காவியாவின் பெற்றோர், மகளை அழைத்துச் சென்றனர்.