/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ராமானுஜர் அனுஷ்டான குளம் சீரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்புராமானுஜர் அனுஷ்டான குளம் சீரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
ராமானுஜர் அனுஷ்டான குளம் சீரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
ராமானுஜர் அனுஷ்டான குளம் சீரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
ராமானுஜர் அனுஷ்டான குளம் சீரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 24, 2024 10:31 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் செவிலிமேடில் ராமானுஜர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவில் எதிரில் உள்ள குளத்தில் ராமானுஜர் நீராடி, அருகில் உள்ள சாலை கிணற்றில் இருந்து வரதராஜ பெருமாள் அபிஷேகத்திற்கு தண்ணீர் கொண்டு சென்றதால், இக்குளத்திற்கு அனுஷ்டான குளம் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
ஆண்டுதோறும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா 21 நாட்கள் முடிந்ததும், காஞ்சிபுரம் செவிலிமேடில் ராமானுஜருக்கு உள்ள தனி சன்னிதியில் அனுஷ்டான குள உற்சவம் விமரிசையாக நடைபெறும்.
இந்த உற்சவத்தில் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் வேடுவர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இந்த உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பர். பல்வேறு சிறப்பு பெற்ற அனுஷ்டானகுளம், தற்போது பராமரிப்பின்றி உள்ளது.இதனால், குளத்தைச் சுற்றிலும் சீமைக்கருவேல மரங்கள், களைச்செடிகள் புதர்போல மண்டியுள்ளன.
எனவே குளத்திற்கு படிகள், சுற்றுச்சுவர் அமைத்து, குளத்தை சுற்றிலும் நடைபாதையுடன், மரக்கன்றுகள், அழகிய பூச்செடிகள் அமைத்து குளத்தை பாதுகாக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.