Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஈரோடு வேளாண் கண்காட்சியில் காட்சிப்படுத்த கலெக்டர் அழைப்பு

ஈரோடு வேளாண் கண்காட்சியில் காட்சிப்படுத்த கலெக்டர் அழைப்பு

ஈரோடு வேளாண் கண்காட்சியில் காட்சிப்படுத்த கலெக்டர் அழைப்பு

ஈரோடு வேளாண் கண்காட்சியில் காட்சிப்படுத்த கலெக்டர் அழைப்பு

ADDED : ஜூன் 06, 2025 02:01 AM


Google News
காஞ்சிபுரம்,:தமிழக அரசு விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்கு, பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. ஜூன்- 11ம் தேதி மற்றும் -12ம் ஆகிய தேதிகளில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகாவில், சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை விஜயமங்கலம் டோல்பிளாசா அருகே, 200-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளன.

இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சியை, முதல்வர் திறக்க உள்ளார். இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.

புதிய தொழில் நுட்பங்கள், வேளாண் இயந்திரங்கள், புதிய ரக பயிர் வகைகள், மதிப்பு கூட்டும் தொழில்நுட்பம் உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட முன்னணி ஏற்றுமதியாளர்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள், உணவு பதப்படுத்துவேரின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை கண்காட்சிகளை கூடங்களில் காண்பிக்க விரும்பினால், https://tnhorticulture.tn.gov.in/temp_work/erode-expo என்ற இணைய தள முகவரியில் பதிவு செய்யலாம்.

மேலும், அந்தந்த வேளாண் உதவி இயக்குநர்களை தொடர்புக் கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us