/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சட்டவிரோத மதுக்கூடங்களை இழுத்து மூட சுற்றறிக்கைசட்டவிரோத மதுக்கூடங்களை இழுத்து மூட சுற்றறிக்கை
சட்டவிரோத மதுக்கூடங்களை இழுத்து மூட சுற்றறிக்கை
சட்டவிரோத மதுக்கூடங்களை இழுத்து மூட சுற்றறிக்கை
சட்டவிரோத மதுக்கூடங்களை இழுத்து மூட சுற்றறிக்கை
ADDED : ஜன 24, 2024 10:11 PM
காஞ்சிபுரம்:டாஸ்மாக் நிர்வாகத்தின், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தின் கீழ், 90 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.
வாலாஜாபாத் அருகேயுள்ள ஊத்துக்காடு பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக பல்வேறு புகார்கள் உள்ளன.மேலும் பல்வேறு டாஸ்மாக் கடை அருகிலேயே காலையிலேயே மது விற்பனை நடப்பதாகவும் புகார் உள்ளது.
குறிப்பாக, செங்கழுநீரோடை வீதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள கடைகளில் அதிகாலையிலேயே சட்டவிரோத மது விற்பனை இயல்பாக நடக்கிறது.
இந்நிலையில், டாஸ்மாக் நிர்வாகத்தின் மாவட்ட மேலாளர், கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், 'தெற்கு மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளுக்கு அருகில், சட்டவிரோத மதுக்கூடங்கள் ஏதும் நடைபெறாத வகையில், கடை மேற்பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
மீறி நடைபெற்றால் காவல் துறைக்கு தகவல் தெரிவித்து சட்டவிரோத மதுக்கூடம் நடைபெறுவதை தடுக்க வேண்டும்' என, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.