/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ புளியம்பாக்கம் சாலை, தெரு முனைகளில் 'சிசிடிவி' அமைப்பு புளியம்பாக்கம் சாலை, தெரு முனைகளில் 'சிசிடிவி' அமைப்பு
புளியம்பாக்கம் சாலை, தெரு முனைகளில் 'சிசிடிவி' அமைப்பு
புளியம்பாக்கம் சாலை, தெரு முனைகளில் 'சிசிடிவி' அமைப்பு
புளியம்பாக்கம் சாலை, தெரு முனைகளில் 'சிசிடிவி' அமைப்பு
ADDED : ஜூன் 26, 2025 11:47 PM

வாலாஜாபாத்:புளியம்பாக்கத்தில், குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் பொருட்டு பிரதான சாலை மற்றும் முக்கியத் தெரு பகுதிகளில் ஊராட்சி சார்பில் 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் வாலாஜாபாத் அடுத்து புளியம்பாக்கம் கிராமம் உள்ளது.
புளியம்பாக்கத்தில் இருந்து, நத்தாநல்லுார் வழியாக ஒரகடம் செல்லும் சாலை, சங்கராபுரம் வழியாக பழையசீவரம் சாலை, அப்பகுதி பாலாற்று வழியாக அங்கம்பாக்கம் செல்லும் தடம் உள்ளது.
இதனால், வாலாஜாபாத்- செங்கல்பட்டு சாலையில் புளியம்பாக்கம் முக்கிய மையப்பகுதியாக உள்ளது. இதனால், வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலையில் நடக்கும் குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் பொருட்டு புளியம்பாக்கத்தில் கேமரா அமைக்க அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி, புளியம்பாக்கம் பிரதான சாலையின் முக்கிய பகுதிகள் மற்றும் புளியம்பாக்கம் ரயில்வே சாலை, தெரு முனை சந்திப்புகள் என, 10க்கும் மேற்பட்ட இடங்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இது அப்பகுதிமக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.