/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்த பேனர் வளர்புரத்தில் விபத்து அபாயம் பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்த பேனர் வளர்புரத்தில் விபத்து அபாயம்
பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்த பேனர் வளர்புரத்தில் விபத்து அபாயம்
பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்த பேனர் வளர்புரத்தில் விபத்து அபாயம்
பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்த பேனர் வளர்புரத்தில் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 26, 2025 11:45 PM

ஸ்ரீபெரும்புதுார்:வளர்புரம் பேருந்து நிறுத்தம் அருகே, நெடுஞ்சாலையோரம் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களால், பயணியர் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், தண்டலம் --- அரக்கோணம் நெடுஞ்சாலையில், வளர்புரம் பேருந்து நிறுத்தம் உள்ளது.
இதன் அருகே, ஊராட்சி மன்ற அலுவலகம், நியாய விலை கடை உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நடிகர் விஜயின் 51 வது பிறந்தநாளையொட்டி, வளர்புரம் பேருந்து நிறுத்தம் அருகே, வரிசையாக ஏராளமான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணியர், விளம்பர பேனர்கள் மேலே விழும் அச்சத்தில் காத்திருக்க வேண்டி உள்ளது.
அதேபோல், நெஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்தில் சிக்கும் சூழல் அதிகரித்துள்ளது. மேலும், காற்று வீசும் போது, பேனர்கள் சரிந்து நெடுஞ்சாலையில் விழுந்தால், விபத்தில் சிக்கும் அச்சத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
எனவே, பேருந்து நிறுத்தம் அருகே, சாலையோரம் விபத்து ஏற்படும் நிலையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.