ADDED : ஜூன் 16, 2025 01:10 AM

ஸ்ரீபெரும்புதுார்:பென்னலுாரில் அமைந்துள்ள அன்னை மருத்துவமனை மற்றும் ராஜலட்சுமி ஹெல்த் சிட்டி மருத்துவ கல்லுாரி சார்பில், உலக ரத்த தான தினத்தையொட்டி, ஸ்ரீபெரும்புதுாரில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கல்லுாரி முதல்வர் வனிதா தலைமை தாங்கி, பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். 500க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ -- மாணவியர், செவிலியர்கள் பங்கேற்று, ரத்த தானம் செய்வதன் நன்மைகள் குறித்து, பொதுமக்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஸ்ரீபெரும்புதுார் தேரடியில் இருந்து துவங்கி, காந்தி சாலை, பேருந்து நிலையம் வழியாக சென்று, ராஜிவ்காந்தி நினைவகம் அருகே பேரணி நிறைவு பெற்றது.