/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 50 ஏக்கரில் குறுங்காடு அமைத்து பராமரிப்பு திருமுக்கூடல் ஊராட்சி தலைவருக்கு விருது 50 ஏக்கரில் குறுங்காடு அமைத்து பராமரிப்பு திருமுக்கூடல் ஊராட்சி தலைவருக்கு விருது
50 ஏக்கரில் குறுங்காடு அமைத்து பராமரிப்பு திருமுக்கூடல் ஊராட்சி தலைவருக்கு விருது
50 ஏக்கரில் குறுங்காடு அமைத்து பராமரிப்பு திருமுக்கூடல் ஊராட்சி தலைவருக்கு விருது
50 ஏக்கரில் குறுங்காடு அமைத்து பராமரிப்பு திருமுக்கூடல் ஊராட்சி தலைவருக்கு விருது
ADDED : ஜூன் 13, 2025 07:47 PM
திருமுக்கூடல்:திருமுக்கூடலில், 50 ஏக்கரில் குறுங்காடு அமைத்து பராமரித்து வரும் ஊராட்சி தலைவருக்கு பசுமை போராளி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில், சங்கல்பதாரு நிறுவனம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து, கடந்த ஆண்டில் 50 ஏக்கரில் நாட்டு மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து வருகின்றனர்.
கடந்த 2023ல், விதைகள் தன்னார்வ அமைப்புடன் இணைந்து, அப்பகுதி மெய்க்கால் புறம்போக்கு நிலத்தில் 1,000 பனை விதைகள் நடவு செய்து பராமரிக்கப்படுகிறது. வில்வம், மகாகணி, புங்கன், பூவரசன், நாவல், வேம்பு, இலுப்பை உள்ளிட்ட பல்வேறு வகையான 30 ஆயிரம் நாட்டு மரக்கன்றுகள் நடவு செய்து சோலார் பாசன பம்புகள் மூலம் சொட்டு நீர் பாசனம் செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதை பாராட்டி, சங்கல்பதாரு நிறுவனம், திருமுக்கூடல் ஊராட்சி தலைவர் மஞ்சுளா முருகனுக்கு பசுமை போராளி விருது வழங்கி கவுரவித்துள்ளது.
ஊராட்சி தலைவர் மஞ்சுளா கூறியதாவது:
திருமுக்கூடலை சுற்றி கடந்த ஆண்டுகளில், கல் குவாரி மற்றும் கிரஷர்கள் ஏற்படுத்தப்பட்டு இயங்குகிறது.
இதனால், தொழிற்சாலை புகை மற்றும் மண் புழுதி போன்றவையால் சுற்றுச்சூழல் மாசடைந்து காணப்படுகிறது.
எனவே, இப்பகுதியில் சங்கல்பதாரு நிறுவனத்துடன் இணைந்த பசுமை மற்றும் இயற்கை அரண் கூடிய குறுங்காடு அமைக்க தீர்மானித்தோம்.
இதற்காக திருமுக்கூடல் ஏரிக்கு அருகாமையில் குன்று பகுதியையொட்டி உள்ள 50 ஏக்கர் பரப்பிலான நிலம் தேர்வு செய்து, ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
இதை பாராட்டி விருது வழங்கப்பட்டிருப்பது பெருமை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.