/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சியில் தி.மு.க., கல்வெட்டு அகற்ற தயக்கம் மாநகராட்சி அதிகாரிகள் மீது அ.தி.மு.க., புகார் காஞ்சியில் தி.மு.க., கல்வெட்டு அகற்ற தயக்கம் மாநகராட்சி அதிகாரிகள் மீது அ.தி.மு.க., புகார்
காஞ்சியில் தி.மு.க., கல்வெட்டு அகற்ற தயக்கம் மாநகராட்சி அதிகாரிகள் மீது அ.தி.மு.க., புகார்
காஞ்சியில் தி.மு.க., கல்வெட்டு அகற்ற தயக்கம் மாநகராட்சி அதிகாரிகள் மீது அ.தி.மு.க., புகார்
காஞ்சியில் தி.மு.க., கல்வெட்டு அகற்ற தயக்கம் மாநகராட்சி அதிகாரிகள் மீது அ.தி.மு.க., புகார்
ADDED : ஜூன் 30, 2025 12:21 AM

காஞ்சிபுரம்:உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மதிக்காமல், காஞ்சிபுரத்தில், மாநகராட்சி அதிகாரிகள், தி.மு.க., கட்சி கல்வெட்டுகளை அகற்ற தயக்கம் காட்டுவதாக அ.தி.மு.க.,வினர் புகார் தெரிவிக்கின்றனர்.
தமிழகம் முழுதும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சியினரின் கொடி கம்பங்கள், கல்வெட்டுகளை அகற்ற வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, அனைத்து கல்வெட்டுகளையும் அகற்ற, அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது.
மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலையில் பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்கள், கல்வெட்டுகள் அகற்றப்பட்டு வருகின்றன.
அதன்படி, காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வார்டில் உள்ள தி.மு.க., -- அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சி கொடி கம்பங்கள் கல்வெட்டுகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் அகற்றினர்.
இதில், திருவள்ளுவர் தெருவில், சாலையோரம் ஒரு பகுதியில் இருந்த அ.தி.மு.க., கட்சி கல்வெட்டு கொடி கம்பத்தை, மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
ஆனால், அதன் எதிரில், அடுத்தடுத்து இரு இடங்களில் உள்ள தி.மு.க., கல்வெட்டுகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக அ.தி.மு.க.,வினர் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வட்ட அ.தி.மு.க., செயலர் சம்பத் கூறியதாவது:
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆளுங்கட்சி, எதிர்கட்சி என, எந்தவித கட்சி பாகுபாடின்றி பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி கொடி கம்பங்களையும், கல்வெட்டுகளையும் பாரபட்சமின்றி அதிகாரிகள் அகற்ற வேண்டும்.
ஆனால், காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள், ஆளும் கட்சியினரின் கொடிகம்பம் கல்வெட்டுகளை அகற்றுவதில் பாரபட்சம் பார்க்கின்றனர்.
மாநகராட்சி 23வது வார்டு திருவள்ளுவர் தெருவில், அ.தி.மு.க., கொடி கம்பம் மற்றும் கல்வெட்டை அகற்றினர்.
ஆனால், அதன் எதிரிலேயே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், அடுத்தடுத்து இரு இடங்களில் உள்ள தி.மு.க., கல்வெட்டை அகற்றவில்லை. ஆளும்கட்சியினர் என்பதால், அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
இதுபோல பல இடங்களில் தி.மு.க., வினரின் கொடிகம்பம், கல்வெட்டு அகற்றப்படாமல் உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகளின் பாரபட்சமான இச்செயல், உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை, அவமதிக்கும் வகையில் உள்ளது.
எனவே, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தும் வகையில், திருவள்ளுவர் தெருவில், மாநகராட்சிக்கு சொந்தமான இரு இடத்தில் உள்ள தி.மு.க., வின் கல்வெட்டுகளை அகற்ற காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.