Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய பெண் கைது

புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய பெண் கைது

புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய பெண் கைது

புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய பெண் கைது

ADDED : ஜூன் 22, 2024 11:38 PM


Google News
Latest Tamil News
சூணாம்பேடு, : புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், தொழுப்பேடு சாலையில், வெண்மாலகரம் பகுதியில், சூணாம்பட்டு போலீஸ்நிலைய ஆய்வாளர் அமிர்தலிங்கம் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ய மடக்கிய போது, வாகனத்தை நிறுத்திவிட்டு, அதில் வந்த இருவர் தப்பிக்க முயன்றனர்.

தப்பிச் செல்ல முயன்ற பெண்னை போலீசார் பிடித்து விசாரித்ததில், ஈசூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்மணி, 34, என்பது தெரியவந்தது. வாகனத்தை சோதனை செய்ததில், புதுச்சேரியில் இருந்து 547 மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்ததது.

மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், பொன்மணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் சிறையில் அடைத்தனர். தப்பியோடிய பொன்மணியின் கணவர் விஜியை தேடி வருகின்றனர். கடந்தாண்டு மே மாதம் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அருகே கள்ளச்சாராயம் குடித்து எட்டு பேர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக, கடந்தாண்டு ஓதியூர், முதலியார்குப்பம், தழுதாளிகுப்பம், நயினார்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், 300 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.

தற்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மதுராந்தகம் டி.எஸ்.பி., சிவசக்தி தலைமையிலான 30க்கும் மேற்பட்ட போலீசார், செய்யூர் பகுதியில் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

கள்ளச்சாராயம் விற்றவர்கள் கைது

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த பாண்டரவேடு காலனி பகுதியில் ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநிவாசாபெருமாள் உத்தரவின்படி ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனை நடத்தினர்.அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம், 55, பஞ்சேஸ்வரி, 48 ஆகியோர் தங்களது வீட்டில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து 15 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us