/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உள்ளாவூர் பொதுக்குளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல் உள்ளாவூர் பொதுக்குளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
உள்ளாவூர் பொதுக்குளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
உள்ளாவூர் பொதுக்குளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
உள்ளாவூர் பொதுக்குளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 22, 2024 11:37 PM

வாலாஜாபாத் : வாலாஜாபாத் ஒன்றியம், உள்ளாவூர் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான2 ஏக்கர் பரப்பிலானபொதுக்குளம்உள்ளது. இந்த குளத்தையொட்டி ஒருபுறம் குடியிருப்பு பகுதி, மற்றொருபுறம் விவசாய நிலங்களும் சூழ்ந்துள்ளன.
இதனால், இக்குளம்இந்த பகுதியின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில், பல ஆண்டுகளாக இக்குளம்தூர்வாராததால் அதன் ஆழப் பகுதி தூர்ந்து காணப்படுகிறது.
இதனால், மழைக்காலங்களில் குறைவான அளவு தண்ணீரே சேகரமாகிறது. பருவ மழைக்காலத்தில் போதுமான தண்ணீர் தேங்காததால் கோடை காலத்தில்குளம்விரைவாக வறண்டு போகிறது.
கடந்த 2019ல், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், இந்த குளத்தங்கரையின் ஒரு பகுதிக்கு மட்டும் கல் பதித்தல் பணி மேற்கொள்ளப்பட்டது.
எனினும் குளம் தூர்வாராமல் உள்ளது. எனவே, உள்ளாவூர் கிராமத்தின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள இந்த பொதுக்குளத்தை தூர்வாரி சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் மற்றும்பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.