ADDED : ஜூலை 22, 2024 11:39 PM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், ஒலிமுகமதுபேட்டை பகுதியில் உள்ள அரக்கோணம் பிரதான சாலையில் வசிப்பவர் அப்துல்காதர் மனைவி மதினா, 48; இவர், நேற்று முன்தினம், அரக்கோணம் பிரதான சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திருப்பதியிலிருந்து, காஞ்சிபுரம் நோக்கி வந்த, 'டயோட்டா இன்னோவா' கார், மதினா மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிவகாஞ்சி போலீசார், மதினாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.