/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ குண்ணவாக்கத்தில் 7ல் தீ மிதி திருவிழா குண்ணவாக்கத்தில் 7ல் தீ மிதி திருவிழா
குண்ணவாக்கத்தில் 7ல் தீ மிதி திருவிழா
குண்ணவாக்கத்தில் 7ல் தீ மிதி திருவிழா
குண்ணவாக்கத்தில் 7ல் தீ மிதி திருவிழா
ADDED : ஜூன் 24, 2024 05:14 AM
காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அடுத்த, குண்ணவாக்கம் கிராமத்தில், கங்கையம்மன், நாகாத்தம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்களில், 16ம் ஆண்டு தீ மிதி திருவிழா ஜூலை- 7ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவை முன்னிட்டு, ஜூலை- 5ம் தேதி கணபதி பூஜை, விளக்கு பூஜை, காப்பு கட்டுதலுடன் நிகழ்ச்சி துவங்குகிறது.
அடுத்த நாள் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளன. ஜூலை- 7ல் தாய் வீட்டு சீதனம் புறப்பாடு, பகலில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி மாலை, 6:00 மணிக்கு தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது என, கிராம நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.