/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மின்மோட்டார் பழுதால் பயன்பாடின்றி குடிநீர் தொட்டி மின்மோட்டார் பழுதால் பயன்பாடின்றி குடிநீர் தொட்டி
மின்மோட்டார் பழுதால் பயன்பாடின்றி குடிநீர் தொட்டி
மின்மோட்டார் பழுதால் பயன்பாடின்றி குடிநீர் தொட்டி
மின்மோட்டார் பழுதால் பயன்பாடின்றி குடிநீர் தொட்டி
ADDED : ஜூன் 23, 2024 07:52 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் செவிலிமேடு மேட்டு காலனி பகுதி வாசிகளுக்கு, குடிநீர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், எம்பெருமான் கோவில் தெருவில், சிறுமின்விசை குழாயுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
இரு மாதங்களுக்கு முன் மின்மோட்டார் பழுதடைந்தது. இதனால், குடிநீர் தொட்டி பயன்பாடின்றி வீணாகி வருகிறது. கூடுதல் குடிநீர் தேவைக்கு இப்பகுதியினர் வேறு பகுதிக்கு சென்று தண்ணீர் பிடித்து வர வேண்டியுள்ளது.
எனவே, பழுதடைந்துள்ள சிறுமின்விசை மின்மோட்டாரை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி யினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.