/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தடுப்பு இல்லாத சிறு பாலம் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' தடுப்பு இல்லாத சிறு பாலம் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
தடுப்பு இல்லாத சிறு பாலம் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
தடுப்பு இல்லாத சிறு பாலம் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
தடுப்பு இல்லாத சிறு பாலம் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
ADDED : ஜூன் 23, 2024 07:53 AM

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆதிகேசவ பெருமாள் நகரில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிவாசிகள், ஆதிகேசவபெருமாள் நகர் பிரதான சாலை வழியே சென்று வருகின்றனர்.
இந்த பிரதான சாலையின் குறுக்கே சிறு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் தடுப்புச்சுவர் இல்லை.
இதனால், வாகன போக்குவரத்து அதிகமுள்ள இந்த சாலையில் உள்ள சிறுபாலத்தில், இருபுறமும் தடுப்புச்சுவர் இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.
இரவு நேரங்களில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிர்பாராத விதமாக கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
அதேபோல், குறுகிய சாலையில் கார், லாரி போன்ற வாகனங்கள் எதிரெதிரே வரும்போது, தடுப்பு இல்லாத பாலத்தில் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.
மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர்.
எனவே, ஆதிகேசவ பெருமாள் நகர் பிரதான சாலையின் குறுக்கே உள்ள சிறுபாலத்தின் இருபுறத்திலும் தடுப்புச்சுவர் அமைக்க, ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.