ADDED : மார் 11, 2025 08:00 PM
காஞ்சிபுரம்:பன்னிரு சைவ சமய திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. சைவ சமய குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர், ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று, சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பான திருவாசகத்தை இயற்றினார்.
திருவாசகம் இயற்றப்பட்ட நாளை நினைவு கூறும் வகையிலும், உலக நன்மைக்காகவும் மாசி மாதம், ஆயில்யம் நட்சத்திரமான நேற்று, திருவண்ணாமலை கிரிவலக்குழு சார்பில், காஞ்சிபுரம் சித்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் நேற்று, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
இதில், கிரிவலக் குழு நிறுவன செயலர் கங்காதரன் தலைமையில், திருவாசகத்தில் உள்ள, 51 பதிகங்களில், 658 வரிகளையும், திருவண்ணாமலை கிரிவல குழுவினர் முற்றோதல் செய்தனர்.