/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தடுப்பூசி மருந்து விபரங்களை கேட்டறிந்த கலெக்டர் தடுப்பூசி மருந்து விபரங்களை கேட்டறிந்த கலெக்டர்
தடுப்பூசி மருந்து விபரங்களை கேட்டறிந்த கலெக்டர்
தடுப்பூசி மருந்து விபரங்களை கேட்டறிந்த கலெக்டர்
தடுப்பூசி மருந்து விபரங்களை கேட்டறிந்த கலெக்டர்
ADDED : ஜூலை 12, 2024 09:21 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், காரைப்பேட்டையில் தமிழ்நாடு அரசு மருத்துவ கிடங்கு உள்ளது. இங்குள்ள குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ள பாம்புகடி, நாய்கடி மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை பார்வையிட்டு, அதன் இருப்புகள் குறித்து, கலெக்டர் கலைச்செல்வி நேற்று கேட்டறிந்தார்.
மேலும் அத்தியாவசிய மருந்துகள், கேன்சர் மருந்துகள் இருப்பு பற்றியும், பதிவேடுகளை பார்வையிட்டும் கலெக்டர் கலைச்செல்வி ஆய்வு செய்தார்கள்.
இதையடுத்து, வாலாஜாபாத் ஒன்றியம், காரை ஊராட்சியில் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், 10 லட்ச ரூபாய் மதிப்பில், புதிய குளம் வெட்டும் பணிகளை, அவர் பார்வையிட்டு, ஊராட்சியிலுள்ள பாலிடெக்னிக் கல்லுாரி, பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கான விடுதியில் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின்போது, அண்ணா புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் சரவணன், இணை இயக்குனர் செந்தில்குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.