ADDED : ஜூலை 12, 2024 10:04 PM
ஸ்ரீபெரும்புதுார்:சேலம் மாவட்டம், ஆத்துார் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ், 30, ஓலா டிரைவர். நேற்று, அதிகாலை 3:00 மணிக்கு, காஞ்சிபுரத்தில் இருந்து, ஒரகடம் நோக்கி, ‛ஸ்விப்ட்' காரில் வந்தார்.
வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், தேவியரிம்பாக்கம் அருகே வந்த போது, பின்னால் வந்த மினி பஸ், தினேஷ் ஓட்டி வந்த கார் மீது மோதியதில், கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், பலத்த காயமடைந்த டிரைவர் தினேஷை மீட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஒரகடம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.