/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பனப்பாக்கம் முனீஸ்வரர் கோவிலில் சுவாமி கிரீடம், நகை, பணம் திருட்டு பனப்பாக்கம் முனீஸ்வரர் கோவிலில் சுவாமி கிரீடம், நகை, பணம் திருட்டு
பனப்பாக்கம் முனீஸ்வரர் கோவிலில் சுவாமி கிரீடம், நகை, பணம் திருட்டு
பனப்பாக்கம் முனீஸ்வரர் கோவிலில் சுவாமி கிரீடம், நகை, பணம் திருட்டு
பனப்பாக்கம் முனீஸ்வரர் கோவிலில் சுவாமி கிரீடம், நகை, பணம் திருட்டு
ADDED : ஜூன் 28, 2024 10:55 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அருகே, பனப்பாக்கம் பகுதியில் உள்ள முனீஸ்வரர் கோவில் பூட்டை உடைத்து, 20,000 ரூபாய், 2 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி கிரீடம் திருடப்பட்டது, அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில் பால் முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரி, நேற்று காலை 5:30 மணிக்கு விளக்கை அணைக்க கோவிலுக்கு சென்றார். அப்போது, கோவிலின் முன்புற கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கோவில் உள்ளே சென்று பார்த்த போது, உண்டியல் மற்றும் பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 20,000 ரூபாய், 2 சவரன் தங்க செயின் மற்றும் வெள்ளி கிரீடம் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஒரகடம் போலீசார் விசாரிக்கின்றனர்.