/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 6 மாதங்களில் 30.4 செ.மீ., மழை ஜூன் மாதம் மட்டும் 19.4 செ.மீ., 6 மாதங்களில் 30.4 செ.மீ., மழை ஜூன் மாதம் மட்டும் 19.4 செ.மீ.,
6 மாதங்களில் 30.4 செ.மீ., மழை ஜூன் மாதம் மட்டும் 19.4 செ.மீ.,
6 மாதங்களில் 30.4 செ.மீ., மழை ஜூன் மாதம் மட்டும் 19.4 செ.மீ.,
6 மாதங்களில் 30.4 செ.மீ., மழை ஜூன் மாதம் மட்டும் 19.4 செ.மீ.,
ADDED : ஜூன் 28, 2024 11:07 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை பொழியும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் அதிக மழை கிடைக்கும்.
ஆனால், தென்மேற்கு பருவமழை காலமான, ஜூன், ஜூலை மாதங்களில் போதிய மழை பெய்வதில்லை. இதனால், நீர்நிலைகள் வற்றி விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுவது வாடிக்கையாக உள்ளது.
அந்த வகையில், ஜனவரி மாதம் முதல் ஜூன் இறுதி வரையிலான கணக்கெடுப்பில், ஆண்டுக்கு சராசரியாக பெய்ய வேண்டிய, 127.7 செ.மீ., மழைக்கு, 30.4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
அதாவது, ஜனவரி, பிப்ரவரி மாத குளிர்காலத்தில், இயல்பான மழையளவான 2.5 செ.மீ.,க்கு பதிலாக, 8.8 செ.மீ., மழைப்பொழிவும், மார்ச் முதல் மே வரையிலான கோடை காலத்தில், 6.2 செ.மீ., மழைக்கு 2.8 செ.மீ., மழை பெய்துள்ளது.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில், 45.8 செ.மீ.,க்கு, ஜூன் மாதம் வரை 19.4 செ.மீ., மழை பொழிந்துள்ளது தெரியவந்துள்ளது.