/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 'தமிழ் புதல்வன்' திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் 'தமிழ் புதல்வன்' திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
'தமிழ் புதல்வன்' திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
'தமிழ் புதல்வன்' திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
'தமிழ் புதல்வன்' திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 21, 2024 07:07 AM
காஞ்சிபுரம் : அரசு பள்ளியில் 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவுவதற்காக, 'தமிழ்ப்புதல்வன்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில்6ம் வகுப்பு முதல்,பிளஸ் 2 வரை பயின்ற மாணவர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக, 1,000 ரூபாய், மாதந்தோறும் வழங்கப்படும். இதன் மூலம், அவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த பாட நூல்கள், பொது அறிவுப்புத்தகங்கள் வாங்குவதற்கு உதவும். 6 முதல் 8ம் வகுப்பு வரை கல்விஉரிமை சட்டம் கீழ் படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஆதார் எண், இஎம்ஐஎஸ் எண், வங்கி கணக்கு விபரம் ஆகிய ஆவணங்களுடன், மாணவர்கள் அந்தந்த உயர் கல்விநிறுவனங்கள் மூலம் இணையதளத்தில்விண்ணப்பிக்க வேண்டும்என, கலெக்டர் கலைச் செல்விதெரிவித்துள்ளார்.