/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கூட்டுறவு முழுநேர பயிற்சிக்கு விண்ணப்ப தேதி நீட்டிப்பு கூட்டுறவு முழுநேர பயிற்சிக்கு விண்ணப்ப தேதி நீட்டிப்பு
கூட்டுறவு முழுநேர பயிற்சிக்கு விண்ணப்ப தேதி நீட்டிப்பு
கூட்டுறவு முழுநேர பயிற்சிக்கு விண்ணப்ப தேதி நீட்டிப்பு
கூட்டுறவு முழுநேர பயிற்சிக்கு விண்ணப்ப தேதி நீட்டிப்பு
ADDED : ஜூலை 21, 2024 07:17 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், நடப்பாண்டிற்கான முழு நேரகூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி பெற, ஜூலை 31ம் தேதி, மாலை, 5:00 மணி வரையில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பாக, www.tncuicm.com எனும் இணையத்தில் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்ப கட்டணமாக, 100 ரூபாய் அரசுடமை மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக, TNSC Bank, Chetput branch, Chennai-10 SB A/c No.210008171, IFSC Code: TNSC0000001 எனும் வங்கி கணக்கிற்குசெலுத்திவிட்டு, அதன் ரசீதினை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பத்தில் இருக்கும் கியூ.ஆர்., கோடு மூலமாக, பதிவேற்றம் செய்த நகல் மற்றும் பதிவேற்றம்செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பதாரர் கையெழுத்திட்டு அண்ணாகூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு நேரில் அல்லது பதிவு தபாலில், ஜூலை- 19ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த விண்ணப்பங்களை விண்ணப்பிக்க தவறியவர்கள், ஜூலை- 31ம் தேதி வரையில் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விபரங்களுக்கு, காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்.6, வந்தவாசி சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் என்கிற முகவரி மற்றும் 044- 27237699 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் மண்டல இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ தெரிவித்து உள்ளார்.