/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாநில வாலிபால் போட்டி ஜேப்பியார் பல்கலை முதலிடம் மாநில வாலிபால் போட்டி ஜேப்பியார் பல்கலை முதலிடம்
மாநில வாலிபால் போட்டி ஜேப்பியார் பல்கலை முதலிடம்
மாநில வாலிபால் போட்டி ஜேப்பியார் பல்கலை முதலிடம்
மாநில வாலிபால் போட்டி ஜேப்பியார் பல்கலை முதலிடம்
ADDED : ஜூலை 09, 2024 03:54 AM

சென்னை, : சேலத்தில் நடந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில், சென்னை ஜேப்பியார் பல்கலை முதலிடம் பிடித்தது.
சேலம் மாவட்ட வாலிபால் சங்கம் மற்றும் ஜான்சன் பிரண்ட்ஸ் கிளப் சார்பில், மாநில அளவிலான வாலிபால் போட்டி, சேலத்திலுள்ள செயின்ட் பால்ஸ் பள்ளியில், கடந்த 5ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
போட்டியில் சென்னை ஜேப்பியார், தமிழக போலீஸ், பாரதியார் கல்லுாரி உள்ளிட்ட ஆறு அணிகள், லீக் முறையில் மோதின.
பெண்களுக்கான 'லீக்' போட்டியில், சென்னை ஜேப்பியார் அணி, 25 - 17, 17 - 25, 27 - 25 என்ற கணக்கில், எஸ்.டி.ஏ.டி., எக்ஸலன்ஸ் அணியையும், 25 - 19, 19 - 25, 25 - 17 என்ற கணக்கில், ஆட்டூர் பாரதியார் கல்லுாரியையும் வீழ்த்தியது.
மற்ற 'லீக்' சுற்றிலும், ஜேப்பியார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, மதுரை அமெரிக்கன் கல்லுாரியை, 25 - 16, 25 - 22 என்ற கணக்கிலும், தமிழக போலீஸ் அணியை, 25 - 21, 25 - 23 என்ற கணக்கிலும் தோற்கடித்தது.
அனைத்து போட்டிகள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில், சென்னை ஜேப்பியார் பல்கலை அணி முதலிடத்தையும், தமிழக போலீஸ் அணி இரண்டாம் இடத்தையும் வென்றன.
எஸ்.டி.ஏ.டி., எக்ஸலன்ஸ், சிவந்தி கிளப், பாரதியார் மற்றும் அமெரிக்கன் கல்லுாரிகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.