/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.,வில் விளையாட்டு திருவிழா நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.,வில் விளையாட்டு திருவிழா
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.,வில் விளையாட்டு திருவிழா
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.,வில் விளையாட்டு திருவிழா
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.,வில் விளையாட்டு திருவிழா
ADDED : ஜூலை 22, 2024 11:19 PM

சென்னை, : சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., உடற் கல்வியியல் கல்லுாரி சார்பில், அதன் நிறுவனர் ஹாரி குரோ பக்கை நினைவு கூரும் வகையில், ஆண்டு தோறும், பிரபல 'பக்' கோப்பைக்கான விளையாட்டு திருவிழா நடைபெறும்.
அந்தவகையில் 67ம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகள், நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி வளாகத்தில் நேற்று துவங்கின.
இதில், சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 5,000க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்றுஉள்ளனர்.
அதில், தடகளம், வில்வித்தை, பூப்பந்து, இறகுபந்து, கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், ஹேண்ட்பால், ஹாக்கி, கபடி, கோ- - கோ, டென்னிஸ், எறிபந்துஉள்ளிட்ட 18 வகையான போட்டிகள் நடக்கின்றன.
ஒய்.எம்.சி.ஏ.,வின் சென்னை மண்டல கல்லுா ரியின் கல்வி இணை இயக்குனர் சுடர்கொடி, கல்லுாரியின் முதல்வர் ஜான்சன் பிரேம்குமார் உள்ளிட்டோர் போட்டியைதுவக்கி வைத்தனர்.
இதில், நேற்று காலை நடந்த கல்லுாரிகளுக்கானடென்னிஸ் போட்டியில், லயோலா அணி 6 - 3 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை வி.ஐ.டி., அணியை வீழ்த்தியது. பள்ளிகளுக்கான வாலிபால் போட்டியில், மாணவர் பிரிவில், ஆவடி வேலம்மாள் பள்ளி 24 - 21 என்ற கணக்கில் ஒய் எம்.சி.ஏ., பள்ளியை தோற்கடித்தது.
பள்ளிகளுக்கு மட்டும் நடத்தப்பட்ட தடகளப் போட்டியில், 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து, மாணவ - மாணவியர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.