/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா விமரிசை அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா விமரிசை
அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா விமரிசை
அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா விமரிசை
அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா விமரிசை
ADDED : ஜூலை 22, 2024 11:18 PM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி திரவுபதியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது. நேற்று முன்தினம், காலை 10:00 மணி அளவில் துரியோதனன் படுகளம் நடைபெற்றது.
பிற்பகல் 12:00 மணி அளவில் தீ குண்டம் தயார் செய்தனர். அதை தொடர்ந்து மாலை 7:00 மணி அளவில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.
இதில், காப்பு கட்டிய பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். இரவு மலர் அலங்காரத்தில், பஞ்ச பாண்டவர்களுடன் திரவுபதியம்மன் வீதியுலா வந்தார்.
நேற்று, தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெற்றது.
அதேபோல, பள்ளம்பாக்கம் தேவி கருமாரியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது. இரவு மலர் அலங்காரத்தில்,தேவி கருமாரியம்மன் வீதியுலா வந்தார்.