/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பாதாள சாக்கடையில் அடைப்பு குளியல் அறையில் கழிவுநீர் ' ரிடர்ன்' பாதாள சாக்கடையில் அடைப்பு குளியல் அறையில் கழிவுநீர் ' ரிடர்ன்'
பாதாள சாக்கடையில் அடைப்பு குளியல் அறையில் கழிவுநீர் ' ரிடர்ன்'
பாதாள சாக்கடையில் அடைப்பு குளியல் அறையில் கழிவுநீர் ' ரிடர்ன்'
பாதாள சாக்கடையில் அடைப்பு குளியல் அறையில் கழிவுநீர் ' ரிடர்ன்'
ADDED : ஜூலை 14, 2024 12:09 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநக ராட்சி, பஞ்சுபேட்டை, ஒற்றைவாடை தெருவில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், ஒரு வாரமாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், வீட்டு கழிப்பறை, குளியல் அறையில் உள்ள கழிவுநீர், பாதாள சாக்கடை வழியாக வெளியேற வேண்டிய நிலையில் மாறாக, அதில் உள்ள கழிவுநீர் வீட்டிற்குள் குளியல் அறையிலும், கழிப்பறையிலும் 'ரிடர்ன்' ஆகிறது.
இதனால், இப்பகுதியினர் தங்கள் வீட்டில் உள்ள கழிப்பறை, குளியல் அறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இயற்கை உபாதையை கழிக்கவும், குளிக்கவும் சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளதாக இப்பகுதிவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
எங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதாள சாக்கடை அடைப்பு குறித்து, மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
பாதாள சாக்கடை அடைப்பை சீரமைக்க, மாநகராட்சி கழிவுநீர் அடைப்பு நீக்கும் வாகனம் வந்தாலும், பஞ்சுபேட்டை பிரதான சாலையில் 'மேன்ஹோல்' உள்ள அடைப்பை மட்டும் பெயரளவுக்கு நீக்குகின்றனர். ஒற்றைவாடை தெருவில் உள்ள 'மேன்ஹோல்' அடைப்பை நீக்குவதில்லை. இதனால், ஓரிரு நாட்களில் மீண்டும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுகிறது.
எனவே, பஞ்சுபேட்டை ஒற்றைவாடை தெருவில், அனைத்து 'மேன் ஹோல்களில்' உள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.