/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் மீன்சந்தை அருகில் சுகாதார சீர்கேடு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் மீன்சந்தை அருகில் சுகாதார சீர்கேடு
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் மீன்சந்தை அருகில் சுகாதார சீர்கேடு
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் மீன்சந்தை அருகில் சுகாதார சீர்கேடு
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் மீன்சந்தை அருகில் சுகாதார சீர்கேடு
ADDED : ஜூலை 15, 2024 02:42 AM

காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம், பெருமாள் தெருவில், மீன் சந்தை மட்டுமின்றி 100க்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன. ஏகாம்பரநாதர் கோவில், புதிய ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இச்சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக மேன்ஹோல்' வழியாக சாலையில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது. வேகமாக செல்லும் வாகனங்களால் கழிவுநீர் தெளிப்பதால், நடந்து செல்வோர் மனஉளச்சலுக்கு ஆளாகின்றனர்.
தொடர்ந்து சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால், மீன் சந்தை மற்றும் குடியிருப்பு வீடுகள் உள்ள இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, பெருமாள் தெருவில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.