/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாலையில் படர்ந்துள்ள எருக்கஞ்செடிகள் சாலையில் படர்ந்துள்ள எருக்கஞ்செடிகள்
சாலையில் படர்ந்துள்ள எருக்கஞ்செடிகள்
சாலையில் படர்ந்துள்ள எருக்கஞ்செடிகள்
சாலையில் படர்ந்துள்ள எருக்கஞ்செடிகள்
ADDED : ஜூலை 15, 2024 02:41 AM

காஞ்சிபுரம்:திருக்காலிமேடில் இருந்து, சின்ன காஞ்சிபுரம் பகுதிக்கு செல்வோர், அல்லாபாத் ஏரிக்கரை சாலை வழியாக சென்று வருகின்றனர்.
பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர், அலுவலகம் செல்வோர் என, வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்த இச்சாலையில், நேதாஜி நகர் சிறுபாலம் அருகில் இருந்து, வரதராஜபுரம் தெரு வரசித்தி விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் செல்லும் சாலை வரை, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் எருக்கம், ஆமணக்கு உள்ளிட்ட செடிகள் வளர்ந்துள்ளன.
சாலையை மறைக்கும் இச்செடிகளால், திருக்காலிமேடில் இருந்து, சின்ன காஞ்சிபுரம் நோக்கி செல்வோர், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
மேலும், கனரக வாகனம் செல்லும்போது, எருக்கஞ்செடிகளின் கிளை ஒடிந்து, அதிலிருந்து வடியும் எருக்கம் பால் நடந்து செல்வோர், இருசக்கர வாகனங்களில் கண்களில் விழுந்தால், கண்பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரிக்கரையோரம் சாலையின் இருபகுதிகளிலும் போக்குவரத்துக்கு இடையூறாக வளர்ந்துள்ள செடிகளை வேருடன் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.