ADDED : ஜூன் 18, 2024 05:22 AM
காஞ்சிபுரம், : உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, விதைகள் தன்னார்வ அமைப்பு மற்றும் திருவேணி அகாடமி பள்ளி சார்பில், வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது.
விதைகள் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் பசுமை சரண் தலைமையில், புங்கன், வேம்பு, பூவரசு இலுப்பை, நாவல், மூங்கில், அரசு போன்ற 300 நாட்டு வரை மரங்கள் நடவு செய்யப்பட்டது. இதில், தன்னார்வலர்களுடன், வாலாஜாபாத் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கத்தினரும் பங்கேற்று மரக்கன்று நட்டனர்.