Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ நகரமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய நுகர்வோர் சங்கம் முதல்வருக்கு மனு

நகரமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய நுகர்வோர் சங்கம் முதல்வருக்கு மனு

நகரமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய நுகர்வோர் சங்கம் முதல்வருக்கு மனு

நகரமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய நுகர்வோர் சங்கம் முதல்வருக்கு மனு

ADDED : ஜூன் 18, 2024 05:22 AM


Google News
காஞ்சிபுரம், : தமிழகத்தில் லே-அவுட்களில் பொது ஒதுக்கீடு இடத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க நகர ஊரமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய கோரி நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்க காஞ்சிபுரம் மாவட்ட செயலர் வழக்கறிஞர் பெர்ரி, தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

மனு விபரம்


தமிழகத்தில் நகர ஊரமைப்பு சட்டத்தின்படியும், 1992ல் வெளியிடப்பட்ட அரசாணையின் படி, 2,500 சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பிலான அனைத்து லே-அவுட்களிலும் குடியிருப்பு மொத்த பரப்பில், 10 சதவீத இடத்தை திறந்தவெளி இடமாக, ஒதுக்கி அந்த இடத்தில் பூங்கா, விளையாட்டு மைதானம் உருவாக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

ஆனால், 2019ம் ஆண்டு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிககளில் இது மாற்றப்பட்டு, 3,000 சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பிலான லே-அவுட்களில் மொத்த பரப்பில் 10 இடத்தை பொது ஒதுக்கீட்டு இடமாக ஒதுக்கலாம் அல்லது அதற்குரிய வழிகாட்டி மதிப்பை அரசுக்கு செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட லே-அவுட்களில் வழிகாட்டி மதிப்பை செலுத்திவிட்டு, பொது ஒதுக்கீட்டு இடத்தை பிளாட் போட்டு விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களுக்கு என, ஒதுக்கப்பட்ட இடங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், அங்கீகாரமற்ற லே-அவுட்களை வரன்முறைபடுத்தும்போது 10 சதவீதம் காலி இடங்களை திறந்தவெளி இடமாக தருவதிலும் விலக்கு அளித்து வழிகாட்டி மதிப்பை செலுத்த புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதேநிலைமை நீடித்தால் குடியிருப்பு பகுதிகளில் பூங்கா குறைந்து எதிர்காலத்தில் பசுமை இல்லாமல் போய்விடும்.

எனவே, கனி தரும் மரங்களை நட்டு பராமரிக்க நகர ஊரமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us