/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ விதிமீறிய வாகனங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிமீறிய வாகனங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்
விதிமீறிய வாகனங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்
விதிமீறிய வாகனங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்
விதிமீறிய வாகனங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்
ADDED : ஜூன் 06, 2024 06:19 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், கடந்த மாதம், காஞ்சிபுரம்,வாலாஜாபாத் உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில், 1,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்களை தணிக்கை செய்தார்.
இதில், அதிக பாரம் ஏற்றியது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, ஏர் ஹாரன் பயன்படுத்தியது, அதிவேகமாக வாகனத்தை இயக்கியது வாகன பதிவு எண், தகுதிச்சான்று, ஹெல்மெட் இல்லாமல் வாகனத்தை இயக்கியது என, விதிமீறிய 109 வாகனங்களுக்கு, ஸ்பாட் பைன் முறையில் 6 லட்சத்து 49 ஆயிரத்து 6 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
இதர வாகனங்களுக்கு இணக்க கட்டணமாக 13 லட்சத்து 45,100 ரூபாய் என, மொத்தம் 19 லட்சத்து 94,106 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என, காஞ்சிபுரம் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.