/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ நாளை குரூப் 4 தேர்வு 40,721 பேர் பங்கேற்பு நாளை குரூப் 4 தேர்வு 40,721 பேர் பங்கேற்பு
நாளை குரூப் 4 தேர்வு 40,721 பேர் பங்கேற்பு
நாளை குரூப் 4 தேர்வு 40,721 பேர் பங்கேற்பு
நாளை குரூப் 4 தேர்வு 40,721 பேர் பங்கேற்பு
ADDED : ஜூன் 06, 2024 10:34 PM
காஞ்சிபுரம்:டி.என்.பி.எஸ்.சி.,எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், குரூப் 4 தேர்வு, நாளை, தமிழகம் முழுதும் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 96 மையங்களில், 142 தேர்வு அறைகளில், 40,721 பேர் இத்தேர்வை நாளை எழுத உள்ளனர். தேர்வை கண்காணிக்க, ஆறு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள், அனுமதி சீட்டுடன் காலை 8:30 மணிக்கு, தேர்வு கூடத்திற்கு வர வேண்டும் எனவும், அடையாள அட்டையின் அசல் ஆவணம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்வு கூடத்திற்கு உள்ளே, மொபைல், மின்னணு கடிகாரம், மின்னணு உபயோக பொருட்கள் எதையும் எடுத்து செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.