/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பொன்னியம்மன் கோவிலில் பால்குட விழா விமரிசை பொன்னியம்மன் கோவிலில் பால்குட விழா விமரிசை
பொன்னியம்மன் கோவிலில் பால்குட விழா விமரிசை
பொன்னியம்மன் கோவிலில் பால்குட விழா விமரிசை
பொன்னியம்மன் கோவிலில் பால்குட விழா விமரிசை
ADDED : ஜூலை 22, 2024 05:50 AM

குப்பையநல்லுார் : உத்திரமேரூர் அடுத்த, குப்பையநல்லுார் கிராம தேவி பொன்னியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 20வது ஆண்டு ஆடி திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது.
விழாவையொட்டி நேற்று, காலை 10:00 மணிக்கு செட்டிகுளம் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு பால்குட ஊர்வலம், முக்கிய வீதி வழியாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தலும், 2:00 மணிக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு 10:00 மணிக்கு நாடகம் நடந்தது. விழாவில் குப்பையநல்லுார் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.