/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பெருநகர் களரொளியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம் பெருநகர் களரொளியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்
பெருநகர் களரொளியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்
பெருநகர் களரொளியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்
பெருநகர் களரொளியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்
ADDED : ஜூலை 22, 2024 05:50 AM

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த, பெருநகரில் உள்ள களரொளியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான ஆடி மாத தேர் திருவிழா, கடந்த 19ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
நேற்று முன்தினம், மதியம் 12:00 மணிக்கு, கூழ்வார்த்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு, அம்மன் குடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.
நேற்று, காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகமும், 11:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. மதியம் 2:00 மணிக்கு மலரால் அலங்கரிக்கப்பட்ட களரொளியம்மன் தேரில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
அப்போது பக்தர்கள் உடலில் அலகு குத்தியும், தேர் இழுத்தும் முதுகில் முள்போட்டு ஆகாயத்தில் தொங்கியபடியும் நேர்த்திக் கடன் செலுத்தினர். தேரில் வீதியுலா வந்த அம்மனை அப்பகுதியினர் தீபம் ஏற்றி வழிபட்டனர்.