/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பழைய பென்ஷன் திட்டம் வேண்டும் உடற்கல்வி ஆசிரியர் சங்கம் தீர்மானம் பழைய பென்ஷன் திட்டம் வேண்டும் உடற்கல்வி ஆசிரியர் சங்கம் தீர்மானம்
பழைய பென்ஷன் திட்டம் வேண்டும் உடற்கல்வி ஆசிரியர் சங்கம் தீர்மானம்
பழைய பென்ஷன் திட்டம் வேண்டும் உடற்கல்வி ஆசிரியர் சங்கம் தீர்மானம்
பழைய பென்ஷன் திட்டம் வேண்டும் உடற்கல்வி ஆசிரியர் சங்கம் தீர்மானம்
ADDED : ஜூன் 06, 2024 11:32 PM
காஞ்சிபுரம்:தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கம் சார்பில் மாவட்ட பொதுக்குழு மற்றும் மற்றும் மாநில செயற்குழு கூட்டம் காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி பள்ளியில், மாவட்ட தலைவர் பா.கோபிநாத் தலைமையில் நடந்தது.
மாநில செயல் தலைவர் செல்வகுமார், மாநில தலைவர் சங்கரபெருமாள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் கென்னடி ஆண்டறிக்கை வாசித்தார்.
இதில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் குறைந்தபட்சம் ஒரு உடற்கல்வி ஆசிரியர், மேல்நிலைப் பள்ளிகளில் ஒரு உடற்கல்வி இயக்குனர் பணியிடம் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தேவை அறிந்து தரமான விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட 14 கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயலர் பாண்டியன் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.