/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்ற கோரிக்கை மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்ற கோரிக்கை
மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்ற கோரிக்கை
மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்ற கோரிக்கை
மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்ற கோரிக்கை
ADDED : ஜூன் 15, 2024 10:56 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பொற்பந்தல் ஊராட்சிக்கு உட்பட்டது சத்யாநகர் கிராமம். இக்கிராமத்தில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்தது.
இதையடுத்து, புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டி தற்போது பயன்பாட்டு வந்துள்ளது.
எனினும், பழுதான பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அகற்றப்படாமல் உள்ளது. குடியிருப்புக்கு மத்தியில் தெருவோரம் உள்ள இந்த டேங்க் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடும் என்ற நிலை உள்ளது.
எனவே, விபத்து அபாயத்திற்கு முன்னதாக இப்பகுதியில் கைவிடப்பட்ட பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.