/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வீட்டின் பூட்டை உடைத்து பணம், பட்டுப்புடவை திருட்டு வீட்டின் பூட்டை உடைத்து பணம், பட்டுப்புடவை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து பணம், பட்டுப்புடவை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து பணம், பட்டுப்புடவை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து பணம், பட்டுப்புடவை திருட்டு
ADDED : ஜூன் 15, 2024 11:01 PM
உத்திரமேரூர்,:உத்திரமேரூர் ஒன்றியம், அருங்குன்றம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 65; இவர், மனைவியோடு வசித்து வருகிறார். கடந்த 13ம் தேதி, சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு மனைவியுடன் சென்றார்.
நேற்று முன்தினம் மாலை திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டனர்.
உள்ளே சென்று பார்த்தபோது வீட்டு பீரோவில் இருந்த 21,000 ரூபாய், 12 பட்டுப் புடவைகள், பித்தளை சாமான்கள் மற்றும் வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து பாலகிருஷ்ணன் அளித்த புகாரின்படி, சாலவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.