/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஓரிக்கையில் வடிகால்வாய் அமைக்க கோரிக்கை ஓரிக்கையில் வடிகால்வாய் அமைக்க கோரிக்கை
ஓரிக்கையில் வடிகால்வாய் அமைக்க கோரிக்கை
ஓரிக்கையில் வடிகால்வாய் அமைக்க கோரிக்கை
ஓரிக்கையில் வடிகால்வாய் அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 19, 2024 01:18 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, ஓரிக்கை, டெம்பிள் சிட்டி, வேளிங்கப்பட்டரை உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் டி.எம்., தோட்டம் பிரதான சாலை வழியாக சென்று வருகின்றனர்.
இத்தெருவில், வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேற பாதாள சாக்கடை மற்றும் கால்வாய் வசதி இல்லை. வீட்டில் இடவசதி உள்ளவர்கள், வீட்டு உபயோக கழிவுநீரை தோட்டத்திற்கு பயன்படுத்துகின்றனர்.
இடவசதி இல்லாதவர்கள், கழிவுநீரை சாலையில் விட வேண்டிய நிலை உள்ளது. தொடர்ந்து சாலையில் வெளியேறும் கழிவுநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையும் சேதமடைகிறது. மேலும், தொற்றுநோய் ஏற்படும் சூழலும் உள்ளது.
எனவே, டி.எம்.தோட்டம் பிரதான சாலையில், மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.